சமூக வலைத்தளங்களில் போலியாக பிரசாரங்கள், வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையிலான பிரசாரங்கள், இனங்களுக்கு இடையிலான நல்லுறவை பாதிக்கும் வகையிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமக்கு தொடர்ந்தும் முறைப்பாடு கிடைக்கப்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறான போலி பிரசாரங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய பிபிசி க்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
