வாக்களிக்கும்போது முகத்தை மறைக்கும் விதத்தில் ஆடைகளோ அல்லது மூக்கு கண்ணாடியோ அணிந்திருந்தால், அடையாளத்தை உறுதி செய்துக் கொள்வதற்காக அவற்றை அப்புறப்படுத்தும் அதிகாரம், தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.
அடையாளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், வாக்களிப்பு நிலையத்திலுள்ள இரண்டாவது அதிகாரி வாக்காளரின் பெயரை கூறியதன் பின்னர் சிறிது நேரத்தின் பின்னரே முகத்தை மூடும் வகையிலான ஆடையை மீண்டும் அணிய சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
