சம்பிக்க ரணவக்க வெளிநாடு செல்ல தடை விதிப்பு.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதி வெளிநாடு செல்லமுடியாத வகையில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் நடக்கும் விசாரணைகளை அடிப்படையாக வைத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.