புற்றுநோய்கான உபகரணம் வாங்குவதற்கு வசூலித்த100 கோடியை NM மொஹமட் ஒப்படைக்கவில்லை - மருத்துவமனை குற்றச்சாட்டு
மஹரகம அபேக்ஸ்சா வைத்தியசாலைக்கு கதிர்வீச்சுஇயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக என தெரிவித்து மொஹமட் என்பவர் ´பயீட்கென்சர் டீம்´ என்ற பெயரால் 100 கோடி ரூபா நிதியை சேகரித்தாகவும் ஆனால் அந்த நிதியை வைத்தியசாலை கணக்கில்வைப்பில் இடவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் வசந்த திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்துள்ளதுடன் அதற்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மஹரகம அபேக்ஸ்சா வைத்தியசாலைக்கு கதிர்வீச்சு இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக தெரிவித்து மொஹமட் என்பவர் 100 கோடி ரூபா நிதியை சேகரித்தார்.
ஆனால் அந்த நிதி அபேக்ஸ்சா வைத்தியசாலையின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படவில்லை மாறாக அது வேறு கணக்கில்வைப்பில் இடப்பட்டுள்ளது.
மக்கள் குறித்த நிதி தொடர்பில் என்னிடம் வினவுகின்றனர்.
வைத்தியசாலையின் கணக்கில் அந்த நிதி வைப்பிலிடப்படவில்லை என நான் உறுதிப்படுத்தியுள்ளேன்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட பொலிஸாரிடம் முறையிட்டேன். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சஹரான் தாக்குதல் நடத்திய அடுத்த நாள் மொஹமட் என்பவர் 20 மில்லியன் ரூபாவை வைப்பிலிட்டார்.
ஏப்ரல் 23 ஆம் திகதி 2 மில்லியன் கிடைத்தது. இது பயங்கரவாதிகளின் கருப்பு பணமா?
இது குறித்த என்னிடம் கணக்காய்வை அறிக்கை கேட்கப்பட்டது. அதனால் என்னாள் இந்த விடயத்தில் வாய்மூடி மௌனியாக இருக்க முடியாது.
அவர் ராஜித்த மற்றும் முன்னாள் அமைச்சர் காசிம் உள்ளிட்டவர்களை பாவித்து என்னை வைத்தியாசாலையில் இருந்து அனுப்பினார்.
எனக்கு அச்சுறுத்தல் விடுத்தமை குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்.
எனது நியமனம் உறுதியான படியால் அவர்களால் என்னை பதவிவிலக்க முடியவில்லை.
மொஹமட் என்பவர் 140 மில்லியன் ரூபாவை சேகரித்தார்.
அவர்கள் அபேக்ஸ்சா வைத்தியசாலைக்கு பணம் சேகரிக்கும் போர்வையில் வேறு அமைப்புக்கு பணம் சேகரித்தார்.
இது குறித்து குற்றவியல் பிரிவில் முறையிட்டதுடன் அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறையிடுமாறு அறுவுறுத்தப்பட்டது.
CID அதிகாரி சுவிட்ஸலாந்துக்கு சென்றிருக்கலாம்.
CID சுயாதீனமானதாக இருந்தால் நியாயம் கிடைக்கும் என்றார்.
