Our Feeds


Tuesday, December 17, 2019

www.shortnews.lk

பாகிஸ்தான் முன்னால் அதிபர் முஷர்ரபுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு

 


தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஷாரப் பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது 2007 நவம்பரில் அவசர நிலை பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷாரப் மீது தேச துரோக குற்றச்சாட்டு கடந்த 2014-ல் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் துபாய் சென்ற முஷாரப் அங்கேயே தங்கிவிட்டார். தேச துரோக வழக்கில் அவர் ஆஜராகாததை தொடர்ந்து அவரது பாஸ்போர்ட் மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு முதல் துபாய்யில் மருத்துவ சிகிச்சைகாக தங்கி உள்ளார். தேச விரோத வழக்கு தொடர்பான விசாணைக்கு ஆஜராகுமாறு முஷாரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்து வருகின்றனர். எனினும் மருத்துசிகிச்சையை காரணமாக கூறி முஷாரப் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தேச துரோக வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழக்கியுள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி வாகர் அகமத் சேத் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தேச விரோத வழக்கில் முஷாராப்புக்கு தூக்கு தண்டனை வழக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »