Our Feeds


Thursday, December 19, 2019

www.shortnews.lk

மர்ஜான் பளீல் தலைமையில் ஹஜ் பேச்சுவார்த்தைக்கான தூதுக்குழு சவுதி பயணிக்கிறது

 


ஹஜ் ஏற்பாடுகள் குறித்த பேச்சுவார்தைகளை நடத்துவதற்கு அரச ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தலைமையில் ஐவர் அடங்கிய குழு எதிர்வரும் 23ம் திகதி சவுதி பயணிக்கிறது. பேச்சுவார்த்தைக்கு தூதுக்குழுவை அனுப்புவதில்லையென கலாசார அமைச்சு ஏற்க்கனவே முடிவெடுத்திருந்த நிலையில் முடிவை மாற்றி மர்ஜான் பளீல் தலைமையில் குழுவை அனுப்பிவைக்க பிரதமர் மஹிந்த தீர்மானித்த அடிப்படையில் குழு பயணிக்கிறது.

2020ம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகள், கோட்டா, முஅல்லிம் ஏற்பாடுகள், மக்கா, மதீனாவுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பில் இக்குழு பேச்சுவார்தை நடத்தவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »