தான் கடந்த ஏழு வருடங்களாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக வாழ்வதாகவும், பெயரை மாற்றிக் கொள்ள வில்லை என்றும் தமிழ் திரைப்பட முன்னனி நடிகர் ஜெய் தமிழகத்தின் பிரபல பத்திரிக்கையான ஆனந்த விகடனுக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனந்த விகடனுக்கு அவர் வழங்கிய பேட்டியின் குறித்த பகுதி இதோ.
“நீங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகச் செய்திகள் வெளியானதே?”
“உண்மைதான். ஏழாண்டுகளாக நான் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன். எனக்கு இஸ்லாம்மீது இனம்புரியாத நம்பிக்கை ஏற்பட்டுச்சு. ‘சாமியே கும்பிடாத பிள்ளை, ஏதோ ஒரு சாமியையாவது கும்பிடறானே’ன்னு வீட்டில சந்தோஷப் பட்டாங்க. மதம் மாறினாலும் இன்னும் பேர் மாத்தலை. அஜீஸ் ஜெய்னு பேரை மாத்திக்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்!”
