Our Feeds


Saturday, December 21, 2019

www.shortnews.lk

வெள்ளை வேன் விகாரத்தை மாற்றிக் கூறினால் உண்மையில் வெள்ளை வேனில் செல்ல வேண்டிவரும் என ராஜித சேனாரத்ன அச்சுறுத்தியதாக ஊடகங்களில் பேசியவர்கள் CCD க்கு வாக்கு மூலம்

 



முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனா­ரத்ன மேலும் இரு­வ­ருடன் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடாத்தி, கொலை, வெள்ளை வேன் கடத்தல், சித்­தி­ர­வதை, கொள்ளை உள்­ளிட்ட தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திய விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள இரு சந்­தேக நபர்­களும், அவர்கள் ஊடக சந்­திப்பில் கூறிய விட­யங்­களை திருத்தி மாற்றிக் கூற முற்­பட்டால் உண்­மை­யி­லேயே வெள்ளை வேனில் செல்ல நேரிடும் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனா­ரத்ன அச்­சு­றுத்­தி­ய­தாக, சந்­தேக நபர்கள் தமது வாக்கு மூலத்தில் கூறி­யுள்­ளனர். குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் விசேட விசா­ரணைப் பிரி­வுக்கு அவர்கள் வழங்­கி­யுள்ள வாக்­கு­மூ­லத்தை சி.சி.டி. கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜய­ர­த்ன­வுக்கு அறிக்­கை­யாக சமர்ப்­பித்­துள்­ளது.
அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, சார­தி­யாக தொழில் புரிந்­து­வரும் தான், கடந்த அக்­டோபர் மாதம் 22 அல்­லது அதனை அண்­மித்த தினம் ஒன்றில் தனது சகோ­த­ர­னான உப்புல் துஷார என்­ப­வ­ருடன் இணைந்து அசங்க என்­ப­வரின் வீட்­டுக்குச் சென்று அங்கு மது­பானம் அருந்­தினோம், இதன்­போது அங்­கி­ருந்த இன்­னு­மொரு நப­ரான அத்­துல சஞ்­சீவ என்­பவர், அவரால் மேற்­கொள்­ளப்­பட்ட கொள்ளைச் சம்­பவம் ஒன்று தொடர்­பிலும், இதன் பின்னர் இடம்­பெற்ற கைது மற்றும் வெள்ளை வேனில் கடத்­தப்­பட்ட சம்­பவம் தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டி­ய­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு அல்­லது மூன்று தினங்­க­ளுக்கு பின்னர் தனது சகோ­த­ர­னான உப்புல் துஷார என்­பவர் தன்னைத் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரத்­தி­ன­வுடன் கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொள்ள நாளொன்றை தெரிவு செய்­துள்­ள­தாக கூறி­ய­தா­கவும், அதற்கு அவர் ஏன் இந்த சந்­திப்பு என்று வின­வி­ய­போது வெள்­ளைவேன் தொடர்பில் ஊடகச் சந்­திப்பை மேற்­கொள்­வ­தற்கு என்று தெரி­வித்­தா­கவும் கூறி­யுள்ளார்.

பின்னர் இந்த ஊடகச் சந்­திப்பில் கலந்து கொள்­வ­தற்­காக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும் என்று சகோ­தரர் தெரி­வித்­த­த­னால்தான் அதற்கு இணக்கம் தெரி­வித்த சந்­தேக நபர், பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜி­தவை சந்­திப்­ப­தற்­கான திக­தி குறிக்­கப்­பட்­ட­தா­கவும் இதற்கு இவர்கள் சம்­ம­தித்­த­வுடன் அவர்­களை அழைத்துச் செல்ல கார் ஒன்று அனுப்­பப்­பட்­ட­தா­கவும் கூறினார்.
கடந்த அக்­டோபர் 25 ஆம் திக­திக்கும் 30 ஆம் திக­திக்கும் இடை­யி­லான காலப்­ப­கு­தியில் கொழும்பு பௌத்­தா­லோக்க மாவத்­தையில் அமைந்­துள்ள ராஜி­தவின் வீட்­டுக்கு இரவு 10 மணி­ய­ளவில் சென்று அவரைச் சந்­தித்­த­போது, அவர் வெள்ளை வேன் சம்­பவம் தொடர்­பான விப­ரத்தை கேட்­ட­றிந்தார். பின்னர் அதன் முதற் பிரதி என்­னிடம் இருக்­கி­றது.
இறுதிப் பகு­திதான் தேவை என்று கூறி­விட்டு இதற்கு தேவை­யான தக­வல்கள் மற்றும் ஆவ­ணங்­களை நான் தரு­கின்றேன் என்றார். பின்னர் ராஜி­த­வுடன் இருந்த முஸ்லிம் நபர்கள் சிலர் இதற்­காக உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு பணம் தேவை என்று கேட்­டார்கள். நாங்கள் எங்­க­ளுக்கு 30 இலட்சம் ரூபாவை கொடுக்­கு­மாறு கேட்­ட­போது அவர்கள் தொகையை குறைக்­க­மு­டி­யாதா என்று கேட்­டார்கள் என்றும் கூறி­யுள்ள சந்­தேக நபர், இதன்­போது ராஜித நாங்கள் இத்­துடன் உங்­களை கைவி­ட­மாட்டோம், உங்கள் இரு­வ­ருக்கும் இரு வீடு­களை வழங்­கு­வ­து­டன், அமெ­ரிக்க தூத­ர­கத்தில் தொழி­லா­ளி­யாக பணி­பு­ரி­வ­தற்கும் வாய்ப்பு ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தாக தெரி­வித்து, குடும்­பத்­துடன் அமெ­ரிக்கா அனுப்­பு­வ­தா­கவும் கூறினார்.
பின்னர் 20 இலட்சம் ரூபா என்று உடன்­பாட்­டுக்கு வந்தோம் என்றும் கூறி­யுள்ளார்.இணக்கம் தெரி­வித்­த­தை­ய­டுத்து தனக்கு ஒரு பிர­தி­யொன்றை கொடுத்து அதனை மனனம் செய்துக் கொள்­ளு­மாறு ராஜித அறி­வித்­த­தா­கவும், ஆனால் அத்­து­ல­வுக்கு இது வழங்­கப்­ப­ட­வில்லை என்றும் கூறி­யுள்ளார்.நவம்பர் மாதம் 10 ஆம் திகதி காலை 5 மணி­ய­ளவில் வாகனம் ஒன்றை அனுப்பி அழைத்துச் சென்று அங்கு முக­மாற்­றத்தை செய்துகொண்டு முற்­பகல் 10 மணி­ய­ளவில் வேறொரு இடத்­துக்கு அழைத்துச் சென்­ற­தா­கவும் பின்னர் அங்கு ஒருவர் வந்து அச்­ச­ம­டைய வேண்டாம் இது என்­னு­டைய இடம் என்று தெரி­வித்­த­தா­கவும் கூறி­யுள்ள சந்­தேக நபர், அரை மணித்­தி­யாலம் கழிந்­ததின் பின்னர் பைல் ஒன்றை கொடுத்து பின்னர் 20 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்­த­தாக தெரி­வித்­துள்ளார்.
இதன்­போது அங்­கி­ருந்த இன்­னு­மொரு அறைக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­போது , அங்கு ராஜித இருந்தார். எல்லாம் சரி­தானே என்றுக் கேட்டார். சிக்­கல்கள் ஏற்­படும் இடங்கள் காணப்­பட்டால் அதனை அவர் கவ­னித்துக் கொள்­வ­தா­கவும் தெரி­வித்­த­தாக கூறி­யுள்ளார்.
இந்தச் சம்­பவம் தொடர்பில் இரண்­டா­வது சந்­தேக நப­ரான வட்­ட­ரெக்கே அத்­துல சஞ்­சீவ மத­நா­யக்க தெரி­வித்­துள்­ள­தா­வது,
முச்­சக்­க­ர­வண்­டியின் சார­தி­யான தன்னைக் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் ராகம ரயில் நிலை­யத்­துக்கு வைத்து யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்புக்கு எடுத்­து­வ­ரப்­பட்ட தங்கம் மற்றும் யூரோக்­களை கொள்­ளை­யிட்­டமை தொடர்பில் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் சமன் மற்றும் தாஸ் ஆகி­யோரின் தலை­மை­யி­லான குழு­வினர் கைது செய்­தனர்.

2013 நவம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பு குற்­றப்­பி­ரிவில் தன்னை ஒப்­ப­டைத்­த­துடன், தடுப்­புக்­காவல் பெறப்­பட்டு கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­னார்கள்.இவ்­வாறு சிறை­வைக்­கப்­பட்டு விடு­த­லை­யாகி வந்­தி­ருந்­த­போதே தானும் சரத்­துடன் அமைச்­சரைச் சந்­திக்க சென்­ற­தா­கவும் அதன்­போதே ராஜித்­தவை முதன் முத­லாக சந்­தித்­த­தா­கவும் தெரி­வித்­த­துடன் சந்­திப்­பின்­போது அமைச்­சரின் செய­லா­ளரும் இருந்­த­துடன் அவர் முஸ்லிம் இனத்­தவர் என்றும் கூறி­யுள்ளார்.
அமைச்­ச­ரிடம் கொள்ளைச் சம்­பவம் தொடர்பில் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அவர் அந்த தங்க நகை­களும், யூரோக்­களும் விடு­த­லைப புலிகள் இயக்­கத்தின் தலைவர் பிர­பா­க­ர­னு­டை­யது என்றும் அதனை கொழும்­புக்கு எடுத்­து­வந்து நகை­மா­ளிகை ஒன்­றுக்கு கொடுத்­ததன் பின்னர் , இவர்கள் அதற்­கான பணத்தை அப்­போ­தைய பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜக்­ப­க்ஷ­வுக்கு வழங்­கு­வ­தற்­காக திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கு­மாறு கேட்டுக் கொண்­ட­தாக கூறி­யுள்ளார்.

இதற்­காக வீடு மற்றும் அமெ­ரிக்கா தூத­ரங்­கத்தில் தொழில் வாய்ப்பு மற்றும் பல சலு­கை­களை வழங்­கு­வ­தாக ராஜித்த கூறி­ய­தா­கவும் அதற்கு பின்னர் இதன் முதற் பகுதி என்­னிடம் இருக்­கின்­றது, மிகு­தியை நீடித்துக் கொள்­ளு­மாறும் கேட்டுக் கொண்டார். பின்னர் தன்னை வெளியில் செல்­லு­மாறு கூறி­விட்டு சரத்தை மட்டும் தடுத்­து­வைத்­தி­ருந்து 10 நிமிடம் கழித்து வெளியில் அனுப்­பி­ய­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.
காரில் வந்துகொண்­டி­ருந்­த­போது வெள்­ளைவேன் சம்­பவம் தொடர்பில் அமைச்­ச­ருக்கு இரா­ணு­வத்தின் கெப்டன் ஒருவர் தெரி­வித்­துள்­ள­தா­கவும் , அதற்­கேற்­றாப்போல் நடிக்­கு­மாறு கேட்டுக் கொண்­ட­தா­கவும் சரத் தெரி­வித்­த­தாக கூறி­யுள்ளார்.


ஊட­க­சந்­திப்பில் கலந்துகொண்­ட­போது 20 க்கும் அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்கள் அங்கு இருந்­தனர். இதன்­போது ராஜித்த, சரத்தை வெள்­ளை­வேனின் சார­தி­யாக கட­மை­யாற்­றி­யவர் என்று தெரி­வித்து, அவரை அந்­தனி டக்லஸ் பெர்­னாண்டோ என்று பெயரை மாற்றி அறி­மு­கப்­ப­டுத்­தினார். என்றும் தன்னைச் சொந்த பெய­ரி­லேயே அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.


இதன்­போது கொள்ளைச் சம்­பவம் தொடர்பில் தன்­மீது தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு தொடர்­பான தக­வல்­க­ளையே தான் தெரி­வித்­த­தா­கவும் பின்னர் ராஜித்­தவின் ஆலோ­ச­னைக்­க­மைய செயற்­பட்­ட­தா­கவும் கூறி­யுள்­ள­தாக குற்றப் புல­னாய்வு பிரி­வி­னரால் சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­ட­போது பெற்றுக் கொண்ட வாக்­கு­மூ­லத்தில் இவ்­வாறு தெரி­யப்­ப­டுத்­தி­ய­தாக அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனா­ரத்­னவின் தலை­மையில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கடத்தல், கொலை மற்றும் சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­ட­வர்கள் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட இரு­வரும் 72 மணித்­தி­யா­ல­யங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்­கப்­பட்ட நிலையில், கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தி­யதை அடுத்து எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »