Our Feeds


Tuesday, February 11, 2020

www.shortnews.lk

தேர்தலுக்கு முன் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்கப்படும் பிரதமர் மஹிந்த உறுதி

 

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபையை உருவாக்கித் தருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக சாய்ந்தமருது பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் வை.எம் ஹனீபா தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் சாய்ந்தமருது பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் கல்முனை மாநகர சபையின் தோடம்பழ சுயேற்சை குழுவுக்கும் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயெ இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதே வேலை கல்முனை உப பிரதேச செயலக காரியாலயத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சிபாரிசுகளை முன்வைக்க தனியான குழுவொன்னை நியமிப்பதெனவும் குறித்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »