Our Feeds


Tuesday, February 11, 2020

www.shortnews.lk

யானை சின்னத்திலேயே கூட்டணி போட்டியிட வேண்டும் - இல்லாவிடில் ஐ.தே.க தனித்து போட்டி ரனில் திட்டவட்டம்

 

சஜித் பிரேமதாசவின் அரசியல் கூட்டணி “இதயம்” சின்னத்தில் போட்டியிட விரும்பிய போதும் “இதயம்” சின்னத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஐ.தே.க வின் யானை சின்னத்திலேயே கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் என ரனில் விக்கிரமசிங்க தரப்பு முன்வைத்த யோசனையை சஜித் தரப்பு நிராகரித்துள்ள நிலையில் யானை சின்னத்தில் தான் இம்முறை தேர்தலை சந்திப்பது என ரனில் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ள நிலையில், யானை சின்னத்தை கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ளா விட்டால் ஐ.தே.க கூட்டணியிலிருந்து விலகி யானை சின்னத்தில் தனித்து போட்டியிடும் என ரனில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »