Our Feeds


Monday, February 10, 2020

www.shortnews.lk

சீனா ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? - சீனர்கள் அச்சம்

 


சீனாவின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் சீனாவில் உருவெடுத்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சுமார் 811 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37198 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சீனாவின் ஜீ ஜின்பிங் கடந்த 03 வாரங்களாக எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. 03 வாரங்களுக்கு முன்னர் இறுதியாக பீஜிங்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியதிலிருந்து இதுவரை அவர் மக்கள் மத்தியிலோ ஊடகங்கள் வழியாகவோ வெளியில் தன்னை காட்டிக் கொள்ள வில்லை. 

ஒரு வேலை சீன ஜனாதிபதிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் அல்லது அவர் தன்னை கொரோனா தொற்றிலிருந்து காத்துக் கொள்ளும் வகையில் ரகசிய இடத்தில் பதுங்கியிருக்கலாம் என சீன மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து பொறுப்புக்களும் சீனாவின் அதிபருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் லீ கெக் யாங் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் மக்களை சந்தித்து பேசி சேவைகளை சரியாக வழங்கும் ஏற்பாடுகளை செய்தாலும் நாட்டின் ஜனாதிபதி தங்களை சந்தித்து பேசாமையினால் சீனர்கள் கடும் கோபத்திலிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »