பிரதமர் மற்றும் பிரதமரின் தனிப்பட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் மக்கள் தொடர்பு அதிகரிகள், அல்லது தனிப்பட்ட அதிகாரிகள் அரசாங்க திட்டங்கள் மற்றும் விவகாரங்களிலும் பிற நிதி பரிவர்தனைகளிலும் தலையிடுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சுகளுக்கும், செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளரினால் எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் எழுத்து மூலமோ தொலைபேசி மூலமோ யாருக்கும் ஆணைகளை வழங்கக் கூடாது என கடும் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஏதாவது தகவல் பரிமாறப்பட வேண்டுமென்றிருந்தால் பிரதமர் அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சகங்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு மாத்திரமே அனுப்ப முடியும் எனவும் சுற்றறிக்கையில் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
