Our Feeds


Sunday, February 9, 2020

www.shortnews.lk

04/21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் முக்கிய ஆதாரங்களை பகிரங்கப்படுத்த பூஜித மற்றும் ஹேமஶ்ரீ தயார்

 


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுக்கத் தவறினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த சில மாதங்களாக சிறையிலிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னால் பாதுகாப்பு செயலாளர் ஹேமஶ்ரீ பிரனாந்து ஆகியோர் பிணையில் விடுதலையாகியுள்ள நிலையில், குண்டுத்தாக்குதக் தொடர்பான விசேட ஆவணங்கள் சிலவற்றை வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் குறித்த இருவரும் சில ரகசிய ஆவணங்களை ஒப்படைத்துள்ள நிலையில் அந்த ஆவணங்களை பகிரங்கப்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு எழுத்து மூலம் தாம் அறிவித்த ஆவணங்களையே குறித்த இருவரும் பகிரங்கப்படுத்தவுள்ளதாக அறிய முடிகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »