Our Feeds


Friday, March 13, 2020

www.shortnews.lk

கொரோனா தொற்றுக்குள்ளான 2 பேர் நெருங்கி பழகியிருந்த 85 பேரில் 13 பேர் தீவிர கண்காணிப்பு

 


கொரோனா தாக்கத்திற்குள்ளாகியுள்ள இருவரும் சென்ற இடங்கள், பழகிய நபர்கள் தொடர்பில் கண்காணித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அணில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

முதலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நபர் 60 பேருடன் நெருங்கி பழகியிருந்தார். அந்த 60 பேரில் 05 பேர் மருத்துவ மனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர்.

இரண்டாம் நபர் கிட்டத்தட்ட  25 குடும்ப உறுப்பினர்களுடன் நெருங்கி பழகியிருந்த நிலையில் அவர்களில் 08 பேர் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்க படுகின்றனர். என அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »