கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மும்முரம் காட்டும் இலங்கை அரசு கொழும்பின் மிக முக்கிய வர்த்தக கட்டிடங்களை மூடுவதற்கு முடிவெடுத்துள்ளது.
•இலங்கையில் இதுவரை 1719 பேர் கொரோனா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
•இவர்கள் அனைவரும் 10 கண்கணிப்பு மையங்களில் கண்கானிக்கப்படுகின்றனர்.
•மார்ச் 1 முதல் 09 வரை இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
•ஸ்பைன், பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஆஸ்திரியா, பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கான விஸா 2 வாரங்களுக்கு இடை நிறுத்தப்படுகிறது.
•சிங்கப்பூர், சீசெல்ஸ் மற்றும் மாலை தீவு நாடுகளுக்கு வழங்கப்படும் ETA விசா இன்று (15) நள்ளிரவு முதல் இடை நிறுத்தப்படுகிறது.


