Our Feeds


Friday, March 13, 2020

www.shortnews.lk

அமெரிக்க இராணுவமே சீனாவில் கொரோனாவை பரப்பியது - ஆதாரத்துடன் சீனா பரபரப்பு குற்றச்சாட்டு

 


சீனாவின் வூஹான் மாநிலத்திலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் அமெரிக்க இராணுவத்தின் மூலம் பரப்பப்பட்டிருக்கலாம் என்றும் அது வூஹானிலிருந்து பரவ வில்லை என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சரவை பேச்சாளர் ஜாலோ லிலியான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரொபட் ரெட்பீல்ட் மார்ச் 11ம் திகதி வெளியிட்டுள்ள தகவலை அடிப்படையாக வைத்தே சீன அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா பரவுவதற்கு முன்னர் அமெரிக்காவில் நிகழ்ந்த சில மரணங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் தான் காரணம் என்று பின்னர் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரொபட் ரெட்பீல்ட் மார்ச் 11ம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மரணங்கள் எப்போது நிகழ்ந்தன எத்தனை பேர் மரணித்தார்கள் என்பது போன்ற விபரங்கள் வெளியிடப் படவில்லை என்றும் தெரிவித்துள் சீன அதிகாரி ஜாலோ லிலியான் இந்த தகவல் மூலம் கொரோனா சீனாவின் வூஹானிலிருந்து பரவ ஆரம்பிக்க வில்லை என்பது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராணுவமே சீனாவில் இந்த வைரஸ் பரவலை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ள ஜாலோ லிலியான் அமெரிக்கா வெளிப்படைத் தன்மையை பேணி தரவுகளை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »