Our Feeds


Monday, March 16, 2020

www.shortnews.lk

கொரோனா வைரஸ் உலகளவில் இன்றைய தாக்கத்தின் நிலை - புதிய தகவல்கள்

 


சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் தொகை 06 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 

உலகம் முழுவதும் 137 நாடுகளில் இதுவரை இந்த வைரஸ் பரவியுள்ளது. 

இதுவரை இந்த வைரஸ் காரணமாக 1,51,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தாலியில் மாத்திரம் 21,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 1441 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

ஈரானில் 724 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 13,000 க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் பல நாடுகளும் தமது எல்லைகளை மூடிவருகின்றன. கொரோனா பரவ ஆரம்பித்த சீனாவில் அதன் தாங்கம் பெரியளவில் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி, ஸ்பைன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் கடுமையாக பரவி வருகின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »