கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக இத்தாலியில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை பெண் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் இன்று மருத்துவமனையை விட்டு வீடு சென்றுள்ளதாக இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.