உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இலங்கையில் இதுவரை எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்த நிலையில் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெரும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனாவுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைக்கான நிலையத்தை தனிமையாக அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையமாக தற்காலிகமாக செயல்படுத்துவதற்காக ஹிஸ்புல்லாஹ்வின் பெட்டிக்கலோ கெம்பஸை அரசு கேட்ட நேரத்தில் கெம்பஸ் நிர்வாகம் அதற்கு மறுப்புத் தெரிவித்தது.
இருப்பினும் ஜனாதிபதியின் விசேட அறிவித்தலின் பேரில் பெட்டிக்கலோ கெம்பஸை கொரோனா பரிசோதனை நிலையமாக தற்காலிகமாக பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் அங்கு செய்து வருகின்றது.
பெட்டிக்கலொ கெம்பசை கொரோனா பரிசோதனை நிலையமாக மாற்றும் திட்டத்தை சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சு ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

