Our Feeds


Thursday, May 21, 2020

www.shortnews.lk

மேலும் 9 பேர் மருத்துவமனையில் - மாளிகாவத்தை சம்பவம்

 

கொழும்பு - மாளிகாவத்தையில் நிவாரண நிதி வழங்கும் நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்ட மேலும் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 பேர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயமடைந்த 9 பேரில் 8 பெண்களும் ஆண் ஒருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே,குறித்த சன நெரிசலில் சிக்குண்ட 3 பெண்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்தவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »