Our Feeds


Friday, May 22, 2020

www.shortnews.lk

ஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவித்தல் !

 

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு,எதிர்வரும் 26 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இரவு 8 மணி தொடக்கம், அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »