Our Feeds


Wednesday, May 20, 2020

www.shortnews.lk

உயர்நீதிமன்றில் இன்றைய தினம் மூன்றாவது நாளாக பரிசீலிப்பு நடவடிக்கை..!

 

பொதுத்தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் 20ம் திகதி நடத்துவதாக அறிவித்து வெளியாக்கப்பட்ட வர்த்தமானி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானிக்கும் எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றில் இன்றைய தினம் மூன்றாவது நாளாக பரிசீலிப்பு நடவடிக்கை ஆரம்பித்துள்ளது

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் புவனகே அலுவிஹாரேஇ சிசிர டி ஆப்ருஇ பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தினால் பரிசீலிக்கப்படவுள்ளது.

இதன்படி இன்றைய தினம் பிரதிவாதி தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளன.

சட்டத்தரணி சரித குணரத்னஇ ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட 6 தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரியஇ அதன் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்திரணி என்.ஏ.ஜே.அபேசேகரஇ பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல்இ ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரஇ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »