Our Feeds


Wednesday, May 13, 2020

www.shortnews.lk

இன்று தேர்தல் ஆணைக்குழு சுகாதாரத் தரப்புகளுடன் சந்திப்பு !

 

கொரோனா வைரஸ் நிலைமைகள் தொடர்பில் இன்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைக்குழு பேச்சு நடத்தவுள்ளது.
நேற்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்திய தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்துவது தொடர்பில் அவர்களின் அபிப்பிராயங்களை கோரியிருந்தது.
இதனையடுத்தே தேர்தலை நடத்தக் கூடிய சாதகமான நிலைமை இருக்கிறதா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைக்குழு பேச்சு நடத்தவுள்ளது.
எவ்வாறாயினும் தேர்தல் தொடர்பிலான நீதிமன்றத் தீர்ப்பினையடுத்தே தேர்தல் திகதி குறித்து இறுதி செய்யப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நேற்றைய கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »