Our Feeds


Monday, June 15, 2020

www.shortnews.lk

சான்றிதழ் வழங்க வந்த முன்னால் ஜனாதிபதியை திருப்பியனுப்பிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் - Video

 

சான்றிதல் வழங்க வந்த முன்னாள் ஜனாதிபதியை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரிகள் (காணொளி)
பொலனறுவை மாவட்டத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதல்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வுக்காக பொலனறுவை பௌத்த மையத்திற்கு இன்று (15) வருகைத் தந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தேர்தல்கள் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக குறித்த இடத்திற்கு வருகைத்தந்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மைத்திரிபால சிறிசேன இம்முறை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பாக பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.


அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்னர் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இந்நிகழ்வு தேர்தல் சட்டத்தை மீறி இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. எனவே தேர்தல் சட்டத்தை மதிக்கின்றேன். எனவே பொதுத்தேர்தல் நிறைவடைந்தது குறித்த சான்றிதல்களை வழங்கி வைப்பேன்என்று அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »