குருணாகல் நகரில் உள்ள புவனேகபாகு மன்னனின் அரசசபை மண்டபம் உடைக்கப்பட்டமை தொடர்பில் குருணாகல் மேயருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு செலவாகும் பணத்தை கருணாகல் நகரசபையிடம் இருந்து பெற்றுக்கொள்ள யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குருணாகல் நகர சபை கூட்டம் நேற்று (17) இடம்பெற்ற நிலையில் மேற்குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த யோசனை 13 உறுப்பினர்களின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், 3 உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் இரண்டு உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அதேபோல் குருணாகல் நகர சபையின் முன்னாள் தலைவரும் இந்த யோசனைக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய குருணாகல் நகர சபையின் 2,180,000 ரூபா நிதியை வழக்கு விசாரணைகளுக்காக செலவிடும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
