ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளதாகவும், கப்பல்கள் அதனை நெருங்க வேண்டாம் எனவும் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை எச்சரிக்கை.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) கடற்படை, கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை நெருங்க வேண்டாம் என எச்சரித்துள்ளதுடன், அவ்வாறு நெருங்கினால் தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
ஐ.ஆர்.ஜி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனானில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மற்றும் வாஷிங்டன் தனது போர்நிறுத்த உறுதிமொழிகளை மீறியதே இந்த முக்கிய நீர்வழிப்பாதை மூடப்பட்டதற்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளது.
