Our Feeds


Tuesday, August 11, 2020

www.shortnews.lk

மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கூட்டத்தை நடத்தினார் இஸ்திஹார்

 

கடந்த 05ம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது பொறுப்பிலிருந்து விடுமுறை பெற்றுக் கொண்டிருந்த அக்குரணை பிரதேச சபையின் தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன் தனது தலைவர் பொறுப்பை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் இன்று (11.08.2020) நடைபெற்ற சபை உறுப்பினர்களின் மாதாந்த ஒன்று கூடல் நிகழ்வை தலைமை ஏற்று நடத்தினார்.


கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சுயேற்சையாக போட்டியிட்ட இஸ்திஹார் இமாதுத்தீன் தனது தலைவர் பொறுப்பை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு விட்டுக் கொடுத்து விட்டார். இனி அந்த பொறுப்பு ஒரு முஸ்லிம் உறுப்பினருக்கு கிடைக்காது என முன்னால் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ஹலீம் ஆகியோரின் தரப்பினரினால் விமர்சிக்கப்பட்ட நிலையில் அந்த விமர்சனத்திற்கு மாற்றமாக மீண்டும் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார் இஸ்திஹார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »