Our Feeds


Saturday, August 29, 2020

www.shortnews.lk

அஜித் ரோஹணவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைப்பாணை

 

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவிற்கு அழைப்பாணை

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சாட்சி விசாரணை செய்வதற்காக அவரிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »