
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (31) காலை முன்னிலை ஆகியிருந்தார்.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 4 மணி நேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.