அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் போது பிரதிப் பிரதமர் பதவியொன்றை முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு வழங்குமாறு சுதந்திர கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆளும் பொது ஜன பெரமுன சார்பில் எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றில் 15 உறுப்பினர்களை கொண்டுள்ள சு.க வுக்கு பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னால் ஜனாதிபதிக்கு பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்படாவிட்டால் புதிய அரசியல் யாப்பு அங்கீகாரத்திற்கு சு.க ஆதரவு வழங்குவதிலிருந்து பின்வாங்கும் எனில் வேறு கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கு பொது ஜன பெரமுன முயற்சிக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
எனினும் துணை பிரதமர் ஒருவரை நியமிப்பது குறித்து எந்த முடிவுகளையும் அரசு எடுக்க வில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரில் இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
