Our Feeds


Monday, August 24, 2020

www.shortnews.lk

சவுதியில் சுயநினைவை இழந்த இலங்கை இளைஞரை தனி விமானத்தில் நாட்டுக்கு அனுப்பிய சவுதி நிறுவனம்

 


சவூதி அரேபியாவில் வேலை செய்த போது மூலையில் இரத்த உரைவு ஏற்பட்ட நிலையில் சுமார் 2 மாத காலம் சுயநினைவை இழந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை இளைஞரை தனி விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்க குறித்த இளைஞர் வேலை செய்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இலங்கையை சேர்ந்த அண்ட்ரூ ரொஹான் என்ற இளைஞரே மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவரை விசேட ஜெட் விமானத்தின் மூலம் குறித்த நிறுவனம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.


கடவத்தை பகுதியை சேர்ந்த அவர் சவுதி அரேபியாவில் கல்ப் வெஸ்ட் என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நோயினால் பாதிக்கப்பட்ட நபரை இலங்கை அனுப்ப குறித்த நிறுவனம் 15 மில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளது.


ரொஹானை அழைத்து வந்த விமானத்தில் விசேட மருத்துவ குழாம் மற்றும் தாதியர் குழுவும் இருந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »