இனவாதத்தை தூண்ட வேண்டும் என்றோ அல்லது மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்தோ தமிழ் மொழி தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் பேசவில்லை. மாறாக வரலாற்று ரீதியான உண்மையையே அங்கு கூறினேன்.
தேர்ச்சிவாய்ந்த ஆணைக்குழு ஒன்று சிங்கள மொழி தமிழ் மொழியை விடவும் காலத்தால் முற்பட்டது என்று கூறுமாயின் நான் அதனை ஏற்றுக் கொள்வேன். என்று தமிழ் மக்கள் தேசிய முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.
