Our Feeds


Saturday, September 5, 2020

www.shortnews.lk

சேர்பியாவும் தனது தூதரகத்தை ஜெரூஸலமுக்கு மாற்றுகிறது - இஸ்ரேல் மகிழ்ச்சி

 

 


செர்பியா தனது தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றவுள்ளதாக தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது அமெரிக்காவை பின்பற்றும் முதல் ஐரோப்பிய நாடாக திகழ்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

2021 ஜூலை மாதத்திற்குள் இந்த இடமாற்றம் முன்னெடுக்கப்படும்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதற்கும், செர்பியாவின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டமைக்காகவும் செர்பிய ஜனாதிபதிக்கு நன்றியையும் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனிய சமாதான ஒப்பந்தத்தில் அதன் நிலை தீர்க்கப்படும் வரை சர்ச்சைக்குரிய நகரமான ஜெருசலேம் குறித்து நாடுகள் நடுநிலை வகித்ததால் இஸ்ரேலில் பெரும்பாலான இராஜதந்திர பணிகள் டெல் அவிவில் உள்ளன.

எனினும் டிசம்பர் 2017 இல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து மாற்றுவதாக அறிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »