ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேத்தியகிரி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சட்ட விரோத துப்பாக்கிகள் உற்பத்தி நிலையத்திலிருந்து
போர 12 வகை துப்பாக்கி 1,
உள்நாட்டுத் துப்பாக்கிகள் 11,
போர 12 ரக துப்பாக்கி ரவைகள் 7,
போர 12 ரக வெற்றுத் துப்பாக்கி ரவைகள் 15,
ஈய உருக்கிகள் 13,
ஈய கட்டைகள் 33,
வான வெடிகள் 10
மற்றும் இரும்பு நாடா 14
ஆகியவை உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் 59 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.