Our Feeds


Sunday, June 7, 2026

SHAHNI RAMEES

புத்தளத்தில் பெரும் சோகம்! - நீரில் மூழ்கி பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம் உயிர்கள்!


புத்தளம் நுரைச்சோலை, தலுவா முகத்துவாரப்

பகுதிக்கு (Daluwa Estuary) சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம் உயிர்கள், கடலில் ஏற்பட்ட கொடூர நீரோட்டத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்!


நேற்று (ஜூன் 06) சனிக்கிழமை மாலை, விடுமுறையைக் கழிப்பதற்காக தலுவா முகத்துவாரப் பகுதிக்குச் சென்ற போதே இந்த எதிர்பாராத அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.


அங்கு நிலவிய மோசமான காலநிலை மற்றும் கடுமையான கடல் நீரோட்டம் காரணமாக, எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். 


பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தீவிர தேடுதலின் பின், மூவரின் உடல்களும் ஜனாஸாவாக மீட்கப்பட்டு தற்போது புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

உயிரிழந்தவர்கள் அனைவரும் புத்தளம் தில்லையடி மற்றும் உமராபாத் பகுதிகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


18 வயது இளம் பெண், 19 வயது இளம் பெண், 24 வயது வாலிபர் என இளம் வயதிலேயே துடிதுடிக்க பிரிந்த இந்த உயிர்களால் ஒட்டுமொத்த புத்தளமே சோகத்தில் மூழ்கியுள்ளது!


எனவே, எக்காரணம் கொண்டும் ஆபத்தான நீர்நிலைகள், ஆறுகள் அல்லது கடல் பகுதிகளுக்கு நீராடச் செல்வதைத் முற்றாகத் தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸாரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »