உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் பலவீனமடைந்து காணப்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இரண்டாவது முறையாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், நேற்றைய தினம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியங்கள் வழங்கியிருந்தார். இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெறுவது தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்த காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அத்தருணத்தில் வெளிநாடு சென்றிருந்ததாகவும் அவர் இதன்போது குற்றம் சாட்டியிருந்தார்.