Our Feeds


Saturday, February 28, 2026

SHAHNI RAMEES

அதிகரித்த பெற்றோல் & டீசல் விலை!

 


மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று

(28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  


அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி அதன் புதிய விலை ரூ. 281 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


லங்கா சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 329 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 


அதேநேரம் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லிட்டரின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. 


இதேவேளை 95 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை ரூ. 340 ஆகவும், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை ரூ. 182 ஆகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »