ரிஷாத் பதியுத்தீனை கொலை செய்வதின் ஊடாக இனங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்குவதற்காக துஷார பீரிஸ் என்பவர் பிரான்ஸிலிருந்து முயற்சி எடுத்தார். இது பற்றிய தகவல்கள் தெரிய வந்தவுடன் பௌத்தனாக நாட்டை நேசித்து இது பற்றிய தகவல்களை பொலிஸ்மா அதிபரிடன் தெரிவித்தேன்.
துஷார பீரிஸ் என்பவர் பிரபாகரன் தொடர்பில் ஒரு திரைப்படம் எடுத்தார் அதனை இலங்கையில் வெளியிட முடியாமல் போனது இலங்கை அரசுடன் அவருக்கு அந்தக் கோபமும் இருக்கிறது. ஆகவே நாட்டுக்குள் பிரச்சினைகளை உண்டாக்க நினைக்கிறார்.
ஞானசார தேரர், அத்துரலிய ரத்ன தேரர் உள்ளிட்டவர்களின் அரசியல் கட்சியான ஜாதிக ஜனபல கட்சியில் இவரும் ஒருவர். தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் இரண்டாக தற்போது பிளவு பட்டுள்ள கட்சியில் தற்போது தலைமறைவாக இருக்கும் தேரருக்கு சார்பானவராக துஷார பீரிஸ் இருக்கிறார் என்கிறார் நாமல் குமார.
யூடியுப் செனல் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.