மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த 11 பேரில் 4 பேரில் உடல்களில் கொரோனா தொற்றிருந்தமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த உடல்களை எரிப்பதா? அடக்குவதா? என்ற பிரச்சினை எழுந்திருந்தது.
இது தொடர்பில் இன்று வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேலை சட்டமா அதிபரின் தரப்பிலிருந்து கலந்து கொண்டிருந்த அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறித்த உடல்களை எரிப்பதை தவிர்த்து அடக்குவதற்கு எதிர்ப்பு வெளியிட்டார்.
கொரோனா உடல்களை எதிர்காது அடக்கம் செய்வது என்பது கொரோனா தொடர்பான சுகாதார தரப்பின் சட்டங்களுக்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.
இரு தரப்பினரின் வாதப் பிரதி வாதங்களை ஆராய்ந்த நீதி மன்றம் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிறைக் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் 04 உடல்களை எரிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
