கொரோனா ஜனாாக்கள் எரிக்கப்படுவதால் அவற்றை பொறுப்பெடுக்க முடியாது என சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மறுத்த வந்த நிலையில் குடும்பத்தினர் பொறுப்பெடுக்க மறுத்த உடல்களை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை எரிக்கும் செலவுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செலவில் அடக்கம் செய்யுமாறு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியதுடன், தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி அவர்களை இறுதிக் கிரியைகளை செய்யுமாறு சட்டமா அதிபரும் இன்று அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்களை தொடர்ந்து ஜனாஸாக்களை எரிக்கும் பணி இன்று மாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 05 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு விட்டதாக தகனம் செய்யும் இடத்தில் இருக்கும் PHI அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
பிறந்து 20 நாளேயான குழந்தை கொரோனா தொற்றில் உயிரிழந்த நிலையில் அந்த குழந்தையின் உடல் இன்று எரியூட்டப்பட்ட நேரத்தில் அங்க சென்ற உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நேரத்திலேயே இதுவரை 05 ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
அதிகாரிகள் பேசும் வீடியோவை கீழே பார்க்கவும்...
