கடந்த புதன்கிழமை கொழும்பு ஷங்கிரி லா உணவகத்தில் வர்ண விளக்குகள் , பாரம்பரிய இசை , குடிபானங்கள் மத்தியில் இடம்பெற்ற பிரதமரின் விசேட விருந்துபசாரத்திலே பங்கேற்று உண்டு மகிழ்ந்துள்ளார்கள், எமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவான 6 உறுப்பினர்களும்.
இந்த இரவு உணவு கொண்டாட்டத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தான் வெறும் 20 நாட்களே ஆன குழந்தை அநியாயமாக எரிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்புலம் பற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இவர்கள் கேள்வி எழுப்பாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
(இன்றைய சன்டே டைம்ஸ் பத்திரிகையில் இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது) என முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மவ்லானா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

