ஜப்பானில் இளம் பெண்கள் 8 பேர் உட்பட 9 பேரை கொலை செய்து உடலை துண்டுகளாக்கிய ஓர் இளைஞனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துளளது.
30 வயதான தக்ஹிரோ ஷிரைஷி (Takahiro Shiraishi) என்பவனுக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது அவனின் வீட்டில் மனித உடற்பாகங்கள் காணப்பட்டதையடுத்து, 2017 ஆம் ஆண்டுஅவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தனக்கு அறிமுகமானவர்களையே தக்ஹிரோ ஷிரைஷி கொலை செய்துள்ளான்.
தற்கொலை செய்யும் நோக்குடன் இருந்தவர்களை தொடர்புகொண்டு அதற்கு தான் உதவுவதாகக் கூறி அவர்களை தனது வீட்டுக்கு வரழைத்த பின்னர் இக்கொலைகளை செய்ததாக தக்ஹிரோ ஷிரைஷி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சிலரிடம் தானும் சேர்ந்து சாகத் தயார் என அவன் கூறியிருந்தான் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அவர் டுவிட்டர் கொலையாளி (டுவிட்டர் கில்லர்) என ஊடகங்களில் குறிப்பிடப்பட்டான்.
கொல்லப்பட்டவர்கள் 15 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 ஆகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையான காலத்தில் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன எனத் குற்றப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஜப்பானின் கியோடோ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
தான் மனிதர்களைக் கொன்று உடலைத் துண்டுகளாக்கியதை தக்ஹிரோ ஷிரைஷி ஒப்புக்கொண்டிருந்தான்.
அவனுக்கு நேற்று மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை அறிவதற்கு ஏராளமான பொதுமக்கள் நீதிமன்றத்தில் திரண்டிருந்தனர். நீதிமன்ற அறையில் பொதுமக்களுக்கான 16 ஆசனங்களே இருந்த போதிலும் சுமார் 400 பேர் அங்கு திரண்டிருந்தனர் என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.