திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மொஹமட் மஹ்ரூப் உள்ளிட்ட இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். அப்துல்லாஹ் மஹ்ரூப் கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 – 2019 காலப்பகுதியில் சதொச நிறுவனத்தில் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மொஹமட் மஹ்ரூபுடன் மாத்தளையை சேர்ந்த பாரூக் மொஹமட் அஸ்லாம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் அவ்விருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு கோட்டையில் உள்ள சிஐடி தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தகவல் தருகையில்,
‘ தமக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சிஐடியினர் இருவரையும் கைது செய்தனர். சதொச நிறுவனத்தின் வாகன மோசடி தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர். 2015 – 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது ‘ எனத் தெரிவித்தார்..
கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமும், சிஐடி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸா ஆகியோரின் மேற்பார்வையில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த வாகன முறைகேட்டின்போது, சதொச நிறுவனத்துக்கு பொறுப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் செயற்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சரும் ரிஷாத் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்தவர் என்ற ரீதியில் அது குறித்தும் விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Wednesday, December 16, 2020
CID இன் 4ஆம் மாடியில் விசாரணையில் அப்துல்லாஹ் மஹ்ரூப்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »