(எம்.மனோசித்ரா)
பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்கவோ அல்லது பிரதேசங்களுக்கிடையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கவோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக போலி செய்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானதாகும் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்த இராணுவத்தளபதி மேலும் கூறுகையில்,
போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கவும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும் எவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதை மக்கள் தாமாக உணர்ந்து செயற்பட வேண்டும். மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு எழுமாறாக அன்டிஜன் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டமையால் 17 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களை இனங்கண்டிருக்காவிட்டால் அவர்கள் செல்லவிருந்த பகுதிகளில் 17 உப கொத்தணிகள் உருவாகியிருக்கும் என்றார்.
