Our Feeds


Thursday, December 24, 2020

www.shortnews.lk

கொரோனா ஜனாஸா விவகாரம் - மகாநாயக்க தேரரிடம் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எடுத்துரைப்பு

 



விழுமிய மதிப்புகளால் நிர்வகிக்கப்படும் அரசாங்கத்தின் முக்கியத்துவம் குறித்து அமராபுரா மகா நிகாயாவின் தலைவர் அகமஹா பண்டித கோட்டுகொட தம்மவாச மகா தேரருடன் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று (24) கலந்துரையாடினார்.


தேசிய ஐக்கியத்துக்கான பாக்கீர் மாக்கார் நிலையம் சர்பாக இக்கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மற்றும் தேசிய ஐக்கியத்திற்கான பாக்கிர் மாக்கார் நிலையத்தின் செயலாளர் ஹெரஸ் பெர்னான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.


கொவிட் 19 தொடர்பான முடிவுகள் முறையான அறிவியல் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்று தலைமை பதவியில் இருக்கும் மகா நாயக்க தேரர் தன்னுடன் உடன்பட்டதாகவும் இது குறித்து விரைவில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என்றும் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் மேலும் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »