கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு
தொடர்ந்தும் நிவாரணம் வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் அவர் இவ்வாறு
குறிப்பிட்டார். இவர்களுக்காக ஏற்கனவே பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை முன்னெடுத்துச்
செல்வதற்காக வங்கிகள் மூலம் இதுவரை 150 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை திறந்தாலும் இந்தத் துறையை வழமைக்கு கொண்டுவர எவ்வளவு
காலம் எடுக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.சுற்றுலாத்துறை வழமை
நிலைக்குத் திரும்பும் வரை இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களை கவனித்துக்
கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் மேலும்
குறிப்பிட்டார்.

Tuesday, December 15, 2020
பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு தொடர்ந்தும் சலுகை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »