Our Feeds


Saturday, April 18, 2026

Zameera

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் இரு கப்பல்கள் மீது தாக்குதல்


 ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த எரிபொருள் கப்பல் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய புரட்சிகர பொலிஸ்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓமானின் வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலை ஈரானின் இரண்டு அதிவேகப் படகுகள் நெருங்கியுள்ளன.

எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அந்தப் படகுகளிலிருந்து கப்பலை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கப்பலும் அதிலிருந்த ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் கப்பலின் மாலுமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் துறைமுக முற்றுகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக ஈரான் அறிவித்த சில மணிநேரங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »