Our Feeds


Saturday, April 18, 2026

Zameera

'கரன்தெனிய ராஜு' இலங்கை அழைத்து வரப்பட்டார்


 இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'கரன்தெனிய ராஜு' என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவினரால் நேற்றிரவு (17) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

கொலைச் சம்பவங்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர், பாதாள உலகக் குழுத் தலைவரான 'கரன்தெனிய சுத்தாவின்' சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »