Our Feeds


Sunday, December 20, 2020

www.shortnews.lk

பாபர் மஸ்ஜித் இடத்தை அபகரித்தமையினால் இந்திய முஸ்லிம்கள் அயோத்தியில் கட்டும் மிகப் பெரும் பள்ளிவாயலின் படம் வெளியீடு

 





உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி- ராமர் கோயில் இடப் பிரச்னை நெடுநாட்களாக இருந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 


அதில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டவும், மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், மசூதி ஒன்றை தனியாக கட்டும் பணிகளை இஸ்லாமிய கலாச்சார அமைப்பு மேற்கொண்டு வந்தது.


இந்த நிலையில் புதிய மசூதியின் மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது. பிரமாண்டமாக கட்டப்படும் மசூதியின் பின்பகுதியில் ஒரு மருத்துவமனையும் இடம்பெறுகிறது. மேலும், ஓர் அருங்காட்சியகமும் கட்டப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »