மனோ கணேசன்
'உதார' என்ற இந்த மனுஷன் சொல்வதை கேளுங்கள். இவரை "வரும்படி" நாக(லோக) ராஜா அழைத்தாராம். (எப்படி, கனவிலா அழைத்தார் என சொல்லவில்லை..!)
"..களனி கங்கை நதி ஆழத்துக்கு நீந்தி மூழ்கி சென்றேன். அப்போ ஒரு கணையாழி பாத்திரத்தில் புனித தந்தம் (எலும்பு துண்டு..!) ஒன்றை தாங்கியபடி ஒரு (நாகப்) பாம்பு வந்தது.
பாம்பையும், கணையாழியையும் எடுத்து நீந்தி கரையேறினேன்.."
அப்புறம் இந்த ஆமதுரு சொல்கிறார்.
அதற்கு முன் இவர் யார் என அறிந்து கொள்ளுங்கள். இவர் களனி ரஜமகா விஹாரையின் பிரதம தேரர், வண கொள்ளுபிடியே சங்கராகித்த மஹிந்த தேரர். களனி பல்கலைக்கழக சரித்திர பேராசிரியர். (இவர்கள் திரிக்கும், "சரித்திரம்" என்ற "தரித்திரம்" எப்படி இருக்கும் என்பதை இதை வைத்தே ஊகித்து கொள்ளலாம்.!)
இப்போ இந்த ஆமதுரு சொல்றத கேளுங்கள்.
"..திடீரென இருமுறை களனி நதியில் பெரும் சப்தம் கேட்டது. நதிநீர் இருபுறமாக பிளந்தது. அங்கே இருந்து 'உதார மஹத்தயா' எழுந்து வந்தார். பாம்பையும், எலும்பையும் கொண்டு வந்தார்.."
"..அப்போது, இந்நாட்டுக்கு நல்ல ஒரு தலைமை 2020ம் வருடத்தில் கிடைக்கும் என கூறப்பட்டது.."
(இந்த சந்தடியில் யார் வந்து இதை இவர் காதில் சொன்னார்கள், என ஆமதுரு சொல்லவேவில்லை..!)
பின்னர் நடந்தது படா சுவாரசியம். (வடிவேலு, விவேக், கவுண்டமணி, செந்தில், சந்தானம், லாரல், ஹார்டி எல்லாம் பிச்சை வாங்கனும்.!)
எல்லாவற்றையும் களனி விகாரையில் மக்கள் தரிசனத்திற்காக வைக்க, தேரர்கள் சபை முடிவு செய்தது.
பாம்பை பிடித்து ஒரு பிளாஸ்டிக் "கொகாகோலா" போத்தலில் போட்டு வைத்தார்கள். (களனி நதியை பிளந்துக்கொண்டு வந்த அந்த மகா நாகராஜ பாம்புக்கு பிளாஸ்டிக் போத்தலை பிளந்து உடைத்து போக முடியாதது ஏன் என எந்தவொரு அறிவாளியும் கேட்கவில்லை..!)
நாகலோகத்திலிருந்து வந்ததாக சொல்லப்பட்ட கணையாழி பாத்திரத்தில், எலும்பை வைத்தார்கள். "தூரதிஷ்டவசமாக" பாத்திரத்தின் அடிப்பக்கத்தை, "என்னை போன்ற சும்மாவே இருக்க முடியாத ஒரு பொடியன்" திருப்பி பார்த்தபோது அங்கே "மேட் இன் சைனா" என பொறிக்கப்பட்டிருந்த விஷயம் தெரிய வந்தது. (அதாவது நாகலோகத்துக்கும், சைனாகாரன் சாமான் விற்கிறான்..!)
பிறகு நம்நாட்டு பெளத்த சிங்கள அப்பாவி சகோதரர்கள் வரிசையாக ஆயிரக்கணக்கில் வர, ஆமதுருக்கள் வரிசையாக நின்று, தாமரை மொட்டுக்களை மக்களுக்கு கொடுத்து, "நாட்டுக்காக வாக்களியுங்கள்" என்று சொன்னார்கள்.
இப்படியே இந்த சிரிப்பு கதை படலம் 2019 ஜனாதிபதி தேர்தலின் போது நிகழ்ந்து. அதன்படி "நல்ல" ஒரு தலைமையை 2020க்குள் கொண்டும் வந்தது.
இதுமாதிரி 2021ல் என்ன செய்ய போகிறார்களோ? போதாதுக்கு ஒரு ஆமதுரு எம்பி பாராளுமன்றம் வருகிறாராம். சிரிக்க தயாராவோம்..!
இப்போ இந்த கதை முடிந்தது..! கத்தரியும் காய்த்தது..!
VIDEO: https://www.facebook.com/1424585811090813/posts/2764943333721714/?d=n
